அகதி - ஏதிலி
அகராதி - அகர முதலி
அங்கத்தினர் - உறுப்பினர்
அட்வகேட், வக்கீல் - வழக்குரைஞர்
அட்வான்சு - முன்பணம்
அட்வைசர் - அறிவுரைஞன்
அதிர்ட்டம் - ஆகூழ்
அத்தாரிட்டி - கருத்தாணை
அபாயம் - தீங்கு
அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் - அமர்த்தாணை
அப்பாவி - குறிப்பிலி
அமாவாசை - காருவா
அர்பன் - நகரியம்
அவசியம் - இன்றியமையாமை
அசோசியேசன் - குமுகம்
ஆக்சிடெண்ட் - தற்செயல் நிகழ்ச்சி
ஆச்சரியம் - வியப்பு
ஆடிட்டோரியம் - கேள்விக்களம்
ஆடியன்ஸ் - கேட்பாளர்
ஆட்டோகிராப் - நினைவேடு
ஆபத்து - ஏதம்
ஆபரேசன் - அறுவைப்பண்டுவம்
ஆனந்தவிகடன் - இன்னகையாளன்
ஆஸ்பத்திரி - மருத்துவமனை
இண்டர்வியூ - நேர்முகத்தேர்வு
இலவசம் - அமஞ்சி
இலாபம் - ஊதியம்
இனிசியல் - முன்னெழுத்து
இன்சார்ஜ் - பொறுப்பு
இன்சூரன்ஸ் - வாணாள் காப்பீடு
ஈரங்கி - கேள்வி முறை
உதயசூரியன் - எழு ஞாயிறு
உதாரணம் - எடுத்துக்காட்டு
எடிட்டிங் - தொகுப்பு
எஸ்டிமேட் - மதிப்பீடு
ஏட்டு - தலைமைக் காவலர்
ஏஜெண்ட் - முகவர்
ஐ.ஜி. - ஆ(ய்வுப்) பொ(துவர்)
கக்கூஸ் - கழிவறை
கடிதம் - மடல்
கடியாரம் - மணிப்பொறி
கதர் - கைந்நூல்
கமிசனர் - ஆணையர்
கமிசன் - ஆணையம், ஆணைக்குழு
கம்பெனி - குழும்பு
கம்யூனிசம் - பொதுவுடைமை
கரண்ட் - மின்னோட்டம்
கல்கி - குதிரை
கவுன்சில் - மன்றம்
கன்வீனர் - அமைப்பாளர்
காங்கிரசுக்கட்சி - பேராயக்கட்சி
காப்பி, நகல் - போலிப்படி
காரியக்கமிட்டி - செயற்குழு
கார்பன் பேப்பர் - கரித் தாள்
காலண்டர் - நாட்காட்டி
கிராமம் - சிற்றூர்
கிராம சேவக் - சிற்றூர் சீராக்குநர்
கீப்பர் - காவலாளி
குமுதம் - ஆம்பல்
கூப்பன் - குறிப்பேடு
கெரோ - முற்றுகை
கேட்லாக் - அட்டவணை
கேமரா - புகைப்படக் கருவி
கைதி - தளையன்
கோர்ட் - முறை மன்றம், நய மன்றம்
சர்க்கஸ் - வட்டரங்கம்
சர்க்கிள் இன்ஸ்பெக்டர் - வட்ட ஆய்வர்
சர்பத் - சுவை நீர்
சர்வேயர் - அளவையாளர்
சர்வோதயம் - அனைத்தெழுச்சி
சலான் - செலுத்துச்சீட்டு
சல்யூட் - கையெடுப்பு
சன்னல் - பலகணி, காலதர், காற்று வாரி
சஸ்பெண்டு - ஐய நீக்கம்
சஸ்பென்ஸ் -
புதிர்
சி.ஐ.டி. - கு(ற்றத்) து(ப்புத்) து(றை)
சிக்னல், சமிக்ஞை - அறிகுறி
சிம்னி - புகை விளக்கு
சினிமா - திரைப்படம்
சினிரமா - தொடர் திரைப்படம்
சின்னம் - குறி, இலச்சினை
சுதந்திரா - தன்னுரிமை
சுதேசமித்திரன் - தன்னாட்டு நண்பன்
சூட்டிங் - படப்பிடிப்பு
சூப்பிரிண்டெண்ட் - மேலாண்மையர்
சூப்பர் மார்க்கட் - சிறப்பங்காடி
செக் - காசோலை
சென்ஸஸ் - குடிக்கணக்கு
சாங்சன் - ஒப்பளிப்பு
சேனை - தானை
சைக்கிலோஸ்டைல் - உருண் முறையச்சு
சோசலிசம் - நிகர்மைக் கொள்கை
சோப் - வழலைக்கட்டி, சவர்க் காரம்
டபரா செட் - குவளைச் செறிப்பு
டப்ள்ஸ் - இருமை
டயர் - (குழாய்க்) கட்டு
டாக்கீஸ் - பேசும் படங்கள்
டாக்குமெண்ட் - ஆவணம்
டாக்டர் - மருத்துவர், பண்டுவர்
டிக்சினரி - அகரமுதலி
டிராப்ஃடு - வரைவு
டிரஸ்ட் - காப்பகம்
டிரசரி - கருவூலம்
டிரான்ஸிஸ்டர் - வானொலி
டிவிசன் - பகுதி
டிஸ்ட்ரிக்ட் அட்மினிஸ்ரேட்டர் (கலெக்டர்) -
மாவட்ட ஆட்சியாளர் (தண்டல் நாயகம்)
டூரிங் டாக்கிஸ் - உலவும் திரைப்படம்
டெபாசிட் - முன்பணம்
டெபுடி - துணை
டெலிபோன் டைரக்டரி - தொலைபேசி நெறியேடு
டெலிவிசன் - தொலைக்காட்சி
டேடியூட்டி - பகற்பணி
டைப்ரைட்டிங் - தட்டச்சு
டைரி - நாட் குறிப்பு
டைனமோ - மின்னூக்கி
ட்யூப் -
உட்குழல்
ட்யூப் லைட் - குழல் விளக்கு
தராசு - நிறைகோல், சீர்கோல்
தாசில் தார் - வட்டாட்சியர்
தாலுக்கா - வட்டம்
தியேட்டர் - (நாடக) அரங்கம்
தினத்தந்தி - நாட்கம்பி
தினமணி - நாட்பரிதி
தீவிரவாதி - தீவிரைவாளி
துரதிர்ஷ்டம் - போகூழ்
தேதி - பக்கம்
நட்சத்திரம் - விண்மீன்
நவசக்தி - புத்தாற்றல்
நவமணி - புதுப்பரிதி
நர்ஸ் - செவிலி
நட்டம் - இழப்பு
நிருபித்தல் - மெய்ப்பித்தல், எண்பித்தல்
நிர்வாகம் - ஆளுகை
பசு - ஆ, ஆன்
பஞ்சர் - தொளை
பத்திரிக்கை - தாளிகை, இதழிகை
பதமஸ்ரீ - தாமரைத்திரு
பல்பு - மின் குமிழ்
பஸ்ஸ்டாண்டு - பேருந்து நிலையம்
பாஸ்போர்ட் - செல்கைச்சீட்டு
பிரச்சனை - சிக்கல்
பிரதிநிதி - நிகராளி, சார்பாளர்
பிரதிவாதி - எதிர் வழக்கர்
பிரமோசன் - உயர்வேற்றம்
பியூன் - பணியாள்
பிட்நோட்டீஸ் - துண்டறிக்கை
பில் - பட்டியல்
பிளாக் - தடுப்பு, தொகுதி
புரோக்கர் - தரகர்
பென்சன் - ஓய்வூதியம்
பேட்டரி - மின்கல அடுப்பு
பேட்டா - படி
பெளர்ணமி - முழுநிலவு, வெள்ளுவா
மத்திய அரசு - நடுவண் அரசு, மைய அரசு
மளிகை - மலிகை
மிதவாதி - மெதுவாளி
மேக்கப் - ஒப்பனை
மேஸ்த்திரி -
கண்காணி
மைக் - ஒலி வாங்கி
யூனிட் - மின்னலகு
ரசிகர் - சுவைஞர்
ராயல்ட்டி - எழுத்துரிமை
ராசாசர் - அரச வயவர்
ராஜ்பவன் - அரசகம்
ராஜ்யசபா - மாநிலங்கள் அவை
ராஜினாமா - விலகல்
ரிகல்சர் - ஒத்திகை
ரிகார்டு - ஒலித்தட்டு, பதிவேடு
ரிபப்ளிக் - குடியரசு
ரீ அப்பாயிண்ட்மெண்ட் - மீளமர்த்தம்
ரூரல் - சிற்றூரியம்
ரைட்டர் - எழுத்தர்
ரொட்டீன் - வழக்கமாய்
லஞ்சம் - கையூட்டு
லாக்கப் - பூட்டகம்
லீவ் - விடுப்பு
லேபிள் - முகச்சீட்டு
லைசன்ஸ் - உரி, அம்பகம்
லோக்சபா - நாடாளுமன்றம்
லோன் - கடன்
வசனம் - உரையாடல்
வந்தே மாதரம் - தாயை வணங்குவோம்
வயது - அகவை
வாபஸ் - பின் வலித்தல்
வாரண்ட் - பிடியாணை
வார்டு - வளாகம்(ஊர்ப்பிரிவு)
விபரம் -
விளக்கம்
விட் - துணுக்கு
வினாடி, செகண்டு - நொடி
வோட்டு - ஒப்போலை
ஹைகமிசனர் - மேலாணையர்
ஹை கோர்ட் - உயர் நய மன்றம்
ஜட்ஜ் - தீர்ப்பாளர்
ஜப்தி - பறிப்பு
ஜலதோசம் - நீர்க்கோள்
ஜவுளி - சவளி
ஜனசக்தி - மக்களாற்றல்
ஜனாதிபதி - மக்கள் தலைவர்
பிரசிடெண்ட் - குடியரசுத் தலைவர்
ஜாக்கிரதை - விழிப்பு
ஜாமின் - பொறுப்பு
ஜில்லா (டிஸ்ட்ரிக்ட்) - மாவட்டம்
ஜோடி - இணை
ஷிப்ஃடு - மாற்று முறை
சயரோகம் - என் புருக்கி
ஸ்டாப்பிங் - நிறுத்தம்
ஸ்டால் - கடை
ஸ்ட்ரைக் -
பணி நிறுத்தம்
ஸ்டேரிங் - சுக்கான்
ஸ்டேசன் - நிற்பகம் (அடி)
ஸ்டோர் - மண்டி, கிடங்கு
சைபர் (zero) - சுழி
கொரியர் - தூதஞ்சல்
புரொபைல் - கருத்துக்கோவை