Friday, 22 October 2021

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்

 

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்

1168 – 75 -> சுவாமி கோபுரம்

1216 – 38 -> ராஜ கோபுரம்

1627 – 28 -> அம்மன் சந்நிதி கோபுரம்

1315 – 47 -> மேற்கு ராஜா கோபுரம்

1372 -> சுவாமி சந்நிதி கோபுரம்

1374 -> சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்

1452 -> ஆறு கால் மண்டபம்

1526 -> 100 கால் மண்டபம்

1559 -> சௌத் ராஜா கோபுரம்

-> முக்குரிணி விநாயகர் கோபுரம்

1560 -> சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்

1562 -> தேரடி மண்டபம்

1563 -> பழைய ஊஞ்சல் மண்டபம்

-> வன்னியடி நட்ராஜர் மண்டபம்

1564 – 72 -> வடக்கு ராஜா கோபுரம்

1564-72 -> வெள்ளி அம்பல மண்டபம்

-> கொலு மண்டபம்

1569 -> சித்ர கோபுரம்

-> ஆயிராங்கால் மண்டபம்

-> 63 நாயன்மார்கள் மண்டபம்

1570 -> அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்

1611 -> வீர வசந்தராயர் மண்டபம்

1613 -> இருட்டு மண்டபம்

1623 -> கிளிக்கூட்டு மண்டபம்

-> புது ஊஞ்சல் மண்டபம்

1623 – 59 -> ராயர் கோபுரம்

-> அஷ்டஷக்தி மண்டபம்

1626 -45 -> புது மண்டபம்

1635 -> நகரா மண்டபம்

1645 -> முக்குருணி விநாயகர்

1659 -> பேச்சியக்காள் மண்டபம்

1708 -> மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்

1975 -> சேர்வைக்காரர் மண்டபம்

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டியவர்களும், அந்த கால கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்களும்:

குலசேகர பாண்டியன் -> 1168 – 75.

மாறவர்மன் சுந்தரபாண்டியன் -> 1216 – 38.

பாராக்ரம பாண்டியன் -> 1315 – 47.

விஸ்வநாத நாயக்கர் -> 1529 – 64.

கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1564 – 72.

வீரப்ப நாயக்கர் -> 1572 – 94.

கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1595 – 1601.

முத்துகிருஷ்ணப்பா நாயக்கர் -> 1601 – 09.

முத்து நாயக்கர் -> 1609 – 23.

திருமலை நாயக்கர் -> 1623 – 1659.

ரௌதிரபதி அம்மாள் மற்றும்

தோளிமம்மை -> 1623 – 59. (Wives of ThirumalaiNaicker )

முத்து வீரப்ப நாயக்கர் -> 1659

சொக்கநாத நாயக்கர் -> 1659 – 82.

முத்து வீரப்ப நாயக்கர் -> 1682 – 89.

விஜயரங்க சோகநாத நாயக்கர் -> 1706 – 32.

மீனாட்சி அரசி -> 1732 – 36

 மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அவை:

1) மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்',

2) சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்',

3) இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்',

4) தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்',

5) தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை

மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்

அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் .

அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.

திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்,

காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்,

காசியில் இறந்தால் புண்ணியம்,

சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்,

திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் .

மதுரையில் பிறந்தாலும் 

மதுரையில் வாழ்ந்தாலும் 

மதுரையில் இறந்தாலும் 

மதுரையில் வழிபட்டாலும் 

மதுரையை நினைத்தாலும் புண்ணியம்.

சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில்

இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்கை ஊர்கள்.

சீறா நாகம் - நாகமலை

கறவா பசு - பசுமலை

பிளிறா யானை - யானைமலை

முட்டா காளை - திருப்பாலை

ஓடா மான் - சிலைமான்

வாடா மலை - அழகர்மலை

காயா பாறை - வாடிப்பட்டி

பாடா குயில் – குயில்குடி.

 

Thursday, 21 October 2021

வெட்டிவேரின் மருத்துவப் பயன்கள்

 

 

வெட்டிவேரின் மருத்துவப் பயன்கள்

வேரின் பொடி குளிர்ச்சி தருகிறது. காய்ச்சல், வயிறு எரிச்சல் போன்றவற்றிர்க்கு சுகமளிக்கிறது. வெப்பம் தணிக்க பசையாக பூசலாம். இது உடலின் வேர்வையும், சிறுநீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது.

 வெட்டி வேரை நன்கு உலர்த்தி பொடிசெய்து கொண்டு 200 மி.கி. முதல் 400 மி.கி. அளவு எடுத்து நீரில் ஊறப்போட்டு அந்த ஊறல் நீரை 30 மி.லி. முதல் 65 மி.லி. அளவு வீதம் அருந்தி வர காச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்கள் கட்டுப் படும். வெட்டிவேரை இரண்டுபிடி எடுத்து ஒரு மண் பாண்டத்தில் போட்டு நன்கு காச்சிய சுடுநீரில் திருநீற்றுப்பச்சை விதையைப்போட்டு வைத்து வெயில் நேரத்தில் குடித்து வர, சூட்டினால் உண்டான தேக எரிச்சல், தாது நஷ்டம், கழுத்துவலி, கோடைக்கொப்பளங்கள், சொட்டுச் சொட்டாக சிறுநீர் இறங்குதல் முதலிய உஷ்ண வியாதிகள் யாவும் தணியும்.

 வெட்டி வேரைக்கொண்டு குழித்தைலம் இறக்கி அதனை 1 முதல் 2 துளி சர்கரையில் கலந்து கொடுக்க வாந்தி பேதி குண்மாகும். கோடைகாலத்தில் நீர் எரிச்சல், தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு , முதலிய நோயால் அவதிப் படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடிசெய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகம் பொடி செர்த்து சம அளவு எடுத்துவெந்நீரில் 200 மி.கி. அருந்தி வர குணம் தெரியும். வெட்டிவேரை இருக்கைகளிலும், குடிநீரில் போட்டும் பயன் படுத்துகிறார்கள்.

பருக்கள் நீங்க:

 முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, அருமருந்தாக திகழ்கிறது இந்த வெட்டிவேர் விழுதுசிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் ஒரு டீஸ்பூன் கொட்டை நீக்கியகடுக்காய் – 1, இந்த இரண்டையும் முந்தின இரவே கொதிநீரில் ஊறவையுங்கள். மறுநாள் இதை அம்மியில் அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது முழுவதுமாக மறைப்பதுபோல் தடவுங்கள். ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்துவிடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது என்பதுதான் இந்த சிகிச்சையின் சிறப்பம்சம்!.

பரு தழும்புகள் மறைய:

 பழைய பருக்கள் ஏற்படுத்திவிட்டுப் போன தழும்புகளால், சிலருக்கு முகம் கரடு முரடாக இருக்கும் அதற்கான நிவாரணம் இதோஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள். இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத்தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள். வாரம் இரு முறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும். சிலர் எப்போது பார்த்தாலும் வியர்வையில் குளித்திருப்பார்கள். அதனாலேயே பருக்களும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கான.

ஒரு ஸ்பெஷல் பேக்:

 வெட்டிவேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை.. இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள் (இவற்றை எவ்வளவுதான் அரைத்தாலும் திப்பி திப்பியாக இருக்கும். இதை நன்றாக சலித்து, நைஸான பவுடரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்). இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி, கழுவுங்கள். வெட்டிவேர் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதை முகத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக் கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும், செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது.

சருமம் மிருதுவாக:

     சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். சில ஆண்களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும். இந்த இரு பிரச்சனைகளுக்குமான ஒரே தீர்வு வெட்டி வேரில் இருக்கிறது. பச்சைப்பயறு – 100 கிராம், சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் – 50 கிராம் இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரையுங்கள். இந்தப் பவுடரை உடலுக்குத் தேய்த்துக் குளியுங்கள். தினமும் இப்படி குளித்து வந்தாலே சிறு கட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும். சருமமும் மிருதுவாகும்.

கூந்தல் மணக்க:

 அப்போதுதான் குளித்துவிட்டு உற்சாகமாக வந்தாலும் முகம் முழுக்க எண்ணெய் வழிந்து உங்களை டல்லாக்குகிறதா? வாரம் இருமுறை தலைக் குளியலுக்கு இந்த வெட்டிவேர் பவுடரை உபயோகியுங்கள். உடனடியாக வித்தியாசம் தெரியும். வெட்டிவேர் – 100 கிராம், வெந்தயம் – 100 கிராம் இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

     எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள். தொடர்ந்து இதைச் செய்தாலே முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு உங்கள் கூந்தலின் நறுமணத்தால் ஏரியாவே மணக்கும்!

வெட்டிவேரை வீட்டில் வளர்க்கலாம்

 மாடியில் அதிக சூரிய ஒளியும் கிடைப்பதாலும், சமையலறை நீர் மறு உபயோகத்துக்கு கிடைப்பதாலும் அதிகமாக கரிம நிலைபாட்டில் (Carbon sequestration) உதவுவதால் நகரங்களில் வளர்க்க மிகவும் ஏற்றது. மிக கொஞ்சமாக மண், தேங்காய்நார், மண் புழு உரம், காய்ந்த வேப்ப இலை இவற்றை கலந்து பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி நாற்றுக்களை வைக்க நமது வேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு ஆரம்பமாகிவிட்டது எனலாம். தேங்காய் நார் இருப்பதால் அதிகநாட்கள் நீரை தக்க வைத்துக்கொள்ளும். அதிக நீர் இருந்தாலும் பிரச்சனை இல்லை. மண் புழு உரம் செடிகளுக்கு நல்ல வளர்ச்சியை தரும். முதல் தரமான வேரினை அறுவடை செய்யலாம்.

 

 

வெட்டிவேரின் பயன்கள்

 

வெட்டிவேரின் பயன்கள்

மண் அரிப்பைத் தடுக்கவும், நீரின் கடினத்தன்மை போக்கவும் வெட்டிவேர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் அதனைப்பற்றிய விழிப்புணர்வும் இல்லை, பயன்படுத்துதலும் இல்லை. வளர்ந்த நாடுகளில் சாலை பராமரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு, சுரங்க பகுதிகளில் மண் அரிப்பை தடுத்தல் போன்ற காரியங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

 கொளுத்தும் கத்தரி வெயிலில் இருந்து தப்பிக்க, குளிர்ச்சியான ஆகாரங்களை பயன்படுத்துவது அவசியம். அந்த வகையில் மண்பானை தண்ணீர் உடலுக்கு மிகவும் நல்லது. இந்த தண்ணீரில் வெட்டி வேரை சேர்க்கும் போது கிருமிகள் அழிந்து நீர் சுத்தமாகும். நல்ல மணம் கிடைக்கும். உடல் சூட்டை குறைக்கும் தன்மை வெட்டி வேருக்கு உண்டு.

 கோடைகாலத்தில் நீர் கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, போன்றவற்றால் அவதிப் படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடிசெய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகம் பொடி செர்த்து சம அளவு எடுத்து வெந்நீரில் 200 மி.கி. அருந்தினால் தீர்வு கிடைக்கும். முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, நல்ல மருந்தாக இருக்கிறது இந்த வெட்டிவேர் விழுது.

 காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். நாவறட்சி, தாகம் நீக்குவதுடன் மன மகிழ்ச்சி உண்டாகும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். மேலும் சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும். வெட்டிவேர் கவலையை நீக்கி மனதை அமைதிப்படுத்தும், மன அழுத்தத்தை நீக்கவும் பெரிதும் உதவுகிறது. வெட்டிவேரில் தயாரிக்கப்படும் எண்ணெய் முக அழகை கூட்டுவதோடு தோலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்துகிறது.

நீண்ட நாட்களாக ஆறாமல் வடுக்கள் இருப்பின் அவற்றின் மேல் வெட்டிவேர் எண்ணெய் தடவி வந்தால் தழும்பு மறைந்து விடும். இதன்

எண்ணெய்யை உடல் முழுவதும் தடவினால் உடலுக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கி பாதுகாக்கிறது. வெட்டிவேரின் எண்ணெய் பாலுணர்வு செய்யும் மூளையின் லிபிடோ பகுதிகளை தூண்டுகிறது. மஜாஜ் செய்வதற்கு வெட்டிவேரின் எண்ணெய்யை பயன்படுத்துகின்றனர். நமது உடலில் உள்ள போதை நீக்க பணிகளை செய்து நிணநீர்க்குரிய வடிகாலை தூண்டுகிறது.

 எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் வெட்டிவேரின் பவுடரை  பயன்படுத்துங்கள். இதை தொடர்ந்து செய்தால் முகத்தில் எண்ணெய்

வழியாது. முகம் கூடுதல் அழகுடன் காணப்படும். வெட்டிவேரை வாங்கி பயன்படுத்துங்க ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் சிறந்தது.

 பூக்களின் வாசனை நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் வேரின் வாசனையினால் வெப்பம் தணிந்து குளுமை ஏற்படும் என்று நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு வகை

புல் இனத்தை சேர்ந்த வெட்டிவேர் மருத்துவ குணம் நிறைந்தது. நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும். வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின்

புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டி வேர் என வழங்கப்படுகிறது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இதில் ரெசின், நிறமி, அமிலம், லைம், உப்பு, இரும்பு ஆக்சைடு, எளிதில் ஆவியாகும் எண்ணெய்

உள்ளது. உற்சாகம் தரும் வெட்டி வேர் குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறு மணத்தையும், உச்சாகத்தையும் தரக்கூடியது. வெட்டி வேரைக்கொண்டு செய்யப்படும். விசிறியைக் கொண்டு வீசி வர உடல் எரிச்சல், நாவறட்சி தாகம், இவை நீங்கும். மனம்மகிழ்ச்சி உண்டாகும். கோடை காலத்தில் வெட்டி வேரைக் கொண்டு செய்யப்படும் தட்டிகளை ஜன்னல்களில் கட்டி வர அறையின் வெப்பத்தைக் குறைத்து மணத்தையும் குளிர்ச்சியையும் தரும்

வெட்டிவேர், வெட்டி வேரின் ஆன்மிக ரகசியம்:

 

வெட்டிவேர்

 வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும். நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல்வளரும். இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும்.வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடலாம். இதன் வேர் மணத்துடன் இருக்கும். இது உடலின் வேர்வையும், சிறு நீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது. இதை ஒரு வருடத்தில் வெட்டி எடுக்கலாம். வேர், குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. இதன் பூ ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் இரண்டு முதல் நான்கு மீட்டர் ஆழம் வரை செல்லும். இது லெமன்கிரேஸ், பாம்ரோஸா புல் போன்று வளரும்.

வெட்டி வேரின் ஆன்மிக ரகசியம்:

-----------------------------------------------------------

#மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்யும் வேர்! 

#உங்க வீட்டை வீட்டு மகாலட்சுமி வெளியே செல்லாமல் இருக்க, இந்த வேரை தண்ணீரில் போட்டு வைத்தாலே போதும்.!!

 ஒருவருடைய வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்து விட்டாலே போதும். நிம்மதிக்கு குறைவிருக்காது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இதற்காக நாம் பல பூஜைகளை செய்து வருகின்றோம். பல குறிப்புகளை பின்பற்றுகின்றோம். பணவரவிற்கு எத்தனையோ தந்திர, மந்திர வழிகளை எல்லாம் செய்கின்றோம். இருந்தும் சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிப்பதில்லை. எல்லோருக்கும் பலன் அளிக்கும் படியான ஒரு பரிகாரத்தை பற்றித்தான் இன்று உங்களுடன் பகிர்கிறேன்... 

 இயற்கையான நல்ல வாசம் தரக்கூடிய ஒரு வேர், இந்த வேர். நம் வீட்டில் இருந்தால் நமக்கு அதிர்ஷ்டம் தான். வாசம் நிறைந்த இடம் என்றாலே அந்த இடத்தில் கட்டாயம் மகாலட்சுமி இருப்பாள் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். இந்த வேரை முறையாக எப்படி பயன்படுத்தினால், நம் வீட்டில் சுபிட்சம் நிலைத்து நிற்கும் என்பதை பற்றியும், மகாலட்சுமியின் அம்சம் கொண்ட அந்த வேர் எது? என்பதைப் பற்றியும், அந்த வேரை நல்ல முறையில் நம் வீட்டில் எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

 மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்யும் அந்த வேர், வெட்டி வேர். இந்த வேர், சாதாரணமாக எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதை வாங்கி எப்போதுமே வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது. உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய கண்ணாடி டம்ளரில் சுத்தமான தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு எலுமிச்சை பழத்தையும் போட்டு, இந்த வேரையும் சிறிதளவு அந்த தண்ணீரில் போட்டு வைத்தால் போதும். அந்த வாசத்திற்கு நம்முடைய வீடு மிகவும் மங்களகரமாக இருக்கும். இந்த வாசத்தில் தான் மகா லட்சுமி நிரந்தரமாக குடி இருப்பாள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த தண்ணீரை வாரத்திற்கு ஒருமுறை மாற்றவேண்டும். எலுமிச்சை பழத்தையும் மாற்ற வேண்டும். தண்ணீரில் இருக்கும் வேர் கெட்டுப் போக வாய்ப்பில்லை. மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும். 

 இதே போல் எந்த ஒரு கெட்ட சக்தியும், இந்த வேரிடம் நெருங்க முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது. சிறிதளவு வெட்டிவேரை எடுத்து, ஒரு சிறிய மஞ்சள் துணியில் கட்டி உங்கள் வீட்டு நிலை வாசற் படியில் கட்டி வைத்தாலே போதும். உங்கள் வீட்டிற்குள் எந்த ஒரு கெட்ட சக்தியும் நுழையாமல் இருக்கும். 

 இந்த வெட்டிவேரை சிறிதளவு எடுத்து நன்றாக காயவைத்து அதன் பின்பு மிக்ஸியில் நன்றாக பொடி செய்து, சல்லடையில் சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். சிறிதளவு வேப்பங் கொழுந்தையும், நன்றாக உலர வைத்து அரைத்து  எடுத்துக் கொள்ளலாம். அதன்பின்பு, இந்த தூளை நெற்றியில் இட்டுக்கொள்ளும் விபூதியோடு கலந்து விடுங்கள். தினந்தோறும் அந்த விபூதியை நெற்றியில் வைத்துக் கொண்டு, வெளியே செல்லும் பட்சத்தில் நீங்கள் செல்லும் எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் அது வெற்றியில் முடியும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இதோடு மட்டுமல்லாமல் கண் திருஷ்டியாக இருந்தாலும், எந்த ஒரு கெட்ட சக்தியும் நம்மை நெருங்காது என்பதும் உண்மை. 

 வெட்டிவேரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவைத்து அதன் பின்பு, அந்த தண்ணீரை வீட்டின் மூலை முடுக்குகளில் தெளித்து விட்டாலும், எதிர்மறை ஆற்றல் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்படியாக வெட்டிவேரை சரியான முறையில் பயன்படுத்தும் பட்சத்தில், நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.   

Saturday, 16 October 2021

தமிழ்நாட்டின் பழங்குடியினர்

 

தமிழ்நாட்டின் பழங்குடியினர்


இந்தியாவில் சுமார் 427 பழங்குடி மக்களின் குழுக்கள் உள்ளன. தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 3.5 சதவீதம் பழங்குடியினர் (2001). அவர்கள் சுமார் 40 குழுக்களாக உள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தமிழக அரசு கீழ்க்கண்ட பெயர்களை பழங்குடியினருடன் பின்வருமாறு தொடர்புபடுத்தினார்கள்; அரையன், அரனாடன், எருலன், ஊராளி, ஏறாவலன், எருகலா, கன்னியன், கன்னியன், கம்மாரா, காட்டு நாயக்கர், கதர், காணிக்காரர், குடியா, குரும்பர் (அலு குரும்பர், பெட்ட குரும்பர், முல்லு குரும்பர், குருமன் குறைக் குறிகா, கொச்சு வேலன், கோராசா, கோத்தர், சோழிகர் ஊரளி, சோழ நாயக்கர், தோடர், பதிமலர், பள்ளியன், பள்ளேயன், பால்ஜியார், பணியார், புலையர், மகாமலசர், மல அரையன், மலையகந்தி, மலகுறவன், மலசார், மலமலனார் மலையாளன் மலை முடுவன், மேலக்குடியான். பெயர்கள் மற்றும் அவற்றின் துணைப் பிரிவுகளில் உள்ள வேறுபாடுகள் காரணமாக அவர்களின் எண்களின் சரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு கடினம்.

பாம்பு

 

பாம்பு



 பாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு. இவை கால்கள் அற்றவையெனினும் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரும் தன்மை கொண்டவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நீந்தக்கூடியவை. பாம்புகளில் 2,700க்கும் அதிகமான வகைகள் உண்டு. நூற்றில் ஒரு விழுக்காடுக்கும் குறைவானவையே நச்சுப்பாம்புகள் ( 1% ). 

 இந்தியாவிலுள்ள நல்ல பாம்பு (நாகப்பாம்பு), கட்டுவிரியன் போன்றவை நச்சுப் பாம்புகள். இவ்வகை நச்சுப் பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவும் உணவுக்காகவும் எதிரி விலங்குளையும் இரைகளையும் பற்களால் கவ்விக் கடிக்கையிலே பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து வெளியேறி கடிபடும் விலங்கின் உடலுள்ளே செலுத்துகின்றது. கடிபட்ட விலங்கு விரைவில் இறக்க நேரிடும்.

இந்தியாவிலே 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்களே நச்சுடையவை. 

 ஒருவகையான நச்சுப்பாம்புகளின் நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்குகின்றது. இவ்வகையில் சேர்ந்ததே நாகப்பாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் என்பன. வேறு சில பாம்புகளின் நஞ்சு இரத்தக் குழாய்களையும் இரத்த அணுக்களையும் தாக்கி அழித்து குருதி உறைவதையும் நிறுத்தவல்லது. கண்ணாடி விரியன் என்னும் பாம்பு இவ்வகையைச் சேர்ந்தது. பாம்பின் தோலானது செதில்களால் சூழப்பட்டிருக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை இவை தங்கள் தோலை உரித்து விடுகின்றன. பாம்புகளின் மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் பண்பின் காரணமாக இவை மருத்துவத் துறையின் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. 

 பாம்பின் தாடை நுண்ணியமாக அதிர்கையில், இந்த ஸ்டேப்ஸும் அதிரும். இந்த அதிர்ச்சியை அதன் மூளைகேட்கிறது’. பாம்பிற்கு காது மடல் இல்லை. பெரும்பாலான பாம்புகளின் எலும்புக்கூடு மண்டை ஓடு, முதுகெலும்புகள் மற்றும் விலா எலும்புகள் மட்டுமே. பாம்பின் முதுகெலும்பு நெடுவரிசையில் 200 முதல் 400 முதுகெலும்புகள் உள்ளன. பாம்பின் அதிகமாக அசையக்கூடிய தாடை எலும்புகள் பெரிய இரைகளை கையாளுதல் மற்றும் உட்கொள்ளுதல் ஆகியவற்றை எளிதாக்குகின்றன. பாம்புகளின் இடது நுரையீரல் மிகவும் சிறியது சிலவற்றில் இல்லாமலும் இருப்பதுண்டு. எனவே பாம்புகளில் நுரையீரல்களில் ஒன்று மட்டுமே வேலை செய்கிறது.

 எல்லாப் பாம்புகளும் ஊனுண்ணிகள் ஆகும். இவை சிறு விலங்குகளை உணவாகக் கொள்கின்றன. சிறிய ஊர்வன, எலி, பறவைகள், அவற்றின்முட்டைகள், மற்றும் பூச்சிகளை இவை உணவாகக் கொள்கின்றன. சில பாம்புகள் இரையை சுற்றி வளைத்து நெருக்கிக் கொல்கின்றன. சில பாம்புகள் தனது இரையை உயிருடன் முழுதாக விழுங்கி விடுகின்றன.

பாம்புகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால் சில பாம்புகள் குட்டி போடுகின்றன. விரியன்கள், பச்சைப்பாம்பு. மண்பாம்பில் கருமுட்டை வயிற்றில் வளர்ந்து குட்டியாகப்பிறக்கிறது. பாம்புகள் முட்டைகளுக்கு அதிகப்பாதுகாப்பு தருவதில்லை. சில பாம்புகள் முட்டைகளை அடைக்காக்கின்றன. பாம்புகளில் குருட்டு(அல்லது புழு)ப்பாம்பு மட்டும் ஆணில்லாமல் கருவடைகிறது. இதில் பெண் இனம் மட்டுமே கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

 

பாம்பென்றால் படையும் நடுங்கும்.

பாம்பின் கால் பாம்பறியும்.

பாம்பிற்க்கு பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்.

 

§  "பாலூட்டி வளர்த்தாலும் பாம்பின் குணம் மாறுமா?"

§  "பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு, கள்ளனுக்கு களவிலே சாவு"

§  "பாம்பும் சாகக் கூடாது கம்பும் உடையக் கூடாது."

§  "பாம்பு தின்கிற ஊர் போனால், நடுமுறி தமக்கு என்று இருக்க வேண்டும்!"

§  "பாம்பு தின்ற ஊருக்குப்போனா நடுக்கண்டம் நம்ப கண்டம்."

§  "பாம்பு என்று அடிக்கவும் முடியாது, பழுதை என்று தாண்டவும் முடியாது."

§  "பாம்பு கடிச்சுதா? பயம் கடிச்சுதா?"

§  "போதாத காலத்தில் புடுக்கும் பாம்பாய்ப் பிடுங்கும்."

§  "பாம்பு கடித்தால் பத்து நிமிஷம், அரணை கடித்தால் அரை நிமிஷம்.

 

விஷமுள்ள, விஷமற்ற பாம்புகள் கண்டறிவது எப்படி:

·         பாம்பின் வால் குறுக்கு வாக்கில் தட்டையாக அமைந்து இறுதியில் அகன்று இருந்தால் அது விஷமுள்ள கடற்பாம்பு வகையாகும்.

·         பாம்பின் வால் பகுதி உருளை வடிவில் அமைந்து, வயிற்று புற செதில்கள் விரிந்து காணப்பட்டு, தலையில் சிறு சிறு செதில்கள் இருந்தால் அது விஷமுள்ள விரியன் பாம்பு வகைகள்.

·         கண்ணுக்கும், மூக்கு துவாரத்திற்கும் இடையே சிறு குழி காணப்பட்டால் அது விஷமுள்ள குழிவிரியன் வகையாகும்.

·         பாம்பின் முதுகின் நடுவில் உள்ள செதில்கள் அறுங்கோண வடிவில் அமைந்து, பிற செதில்களை விட பெரியதாக இருந்து, கீழ் உதட்டு செதில் பெரியதாக இருந்தால் விஷமுள்ள கட்டுவிரியன் வகையை சேர்ந்ததாகும்.

·         வயிற்றுபுறம் விரிந்து காணப்படாமல் இருந்தால் அது விஷமற்ற பாம்புகளாகும்.

·         தலைப் பகுதியில் பெரிய கவசத்தால் தகடுகள் அமைந்து சாதாரணமாக காணப்பட்டால் அவைகள் விஷமற்றவைகள்.

 



பாம்புகள் பற்றிய மூட நம்பிக்கை:

·         நல்ல பாம்பு மகுடியின் இசைக்கேற்ப படம் எடுத்து ஆடும்.

·         நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் ஒரே இனத்தை சேர்ந்த ஆண், பெண் பாம்புகள்.

·         நல்ல பாம்பு மிகவும் வயதானவுடன் தன் தலையில் மாணிக்ககல் வைத்திருக்கும்.

·         நல்ல பாம்பையோ அல்லது வேறு வகை பாம்பையோ கொன்றுவிட்டால் அதன் ஜோடி கொன்றவரை பழி வாங்கும் என்பது.

·         பாம்புகள் வழவழப்பாக இருக்கும்.

·         பாம்புகள் பாலை விரும்பி குடிக்கும்.

·         மண்ணுளிப் பாம்புகளுக்கு இரண்டு தலைகள் உண்டு. அவைகள் கடித்தால் தொழுநோய் வரும்.

·         பச்சைப் பாம்பு கண்களை கொத்தும்.

·         கொம்பேறி மூக்கன் மனிதனை கடித்து கொன்று விட்டு, மரத்தில் ஏறி அந்த மனிதன் உடல் எரிப்பதை பார்க்கும். இவ்வாறு கூறப்படும் அனைத்தும் கட்டுக் கதைகள். சிலரால் பரப்பப்பட்ட மூட நம்பிக்கைகள்.