ருத்திராக்ஷம்
ருத்திராக்ஷம்,உருத்திராக்கம் என பல பெயர்களில் அறியப்படும்
இந்த உருத்திராக்ஷம் பல கருத்துக்களை உள்ளடக்கியன,வடமொழியில் ருத்ராக்ஷம் என்பதற்கு
‘’ருத்திரனின் கண்கள்’’ எனபதாக பொருள் கூறப்படுகிறது.
ருத்திரன் எனபது சிவனை குறிக்கிறது.
‘’Ganitrus’’என்ற மரத்தின் பழத்தில் இருந்து பெறப்படும்
விதைதான் இந்த உருத்திராட்சம்.
இம் மரங்கள் காணப்படும் பகுதி:
இமயமலை அடிவாரம்,கங்கை நதியின் சமவெளிப் பகுதி,மலேயா
மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது.
இந்த தாவரம் 90 வகை இருக்கிறது,என தாவரவியல் அறிஞர்கள்
பகுத்துள்ளனர்.
இதில் 25 வகை மரங்கள் இந்தியா மற்றும் நேபாள நாடுகளில்
காணப்படுகின்றன.
இந்த வகை மரங்கள் 80 அடி உயரம் வளரும்,
உருத்திராட்ச மரத்தின் சில வகைகள் தமிழகத்தின் பழநி,நீலகிரி
போன்ற இடங்களில் கேரளாவில் திருவாங்கூர் பகுதியில் கர்நாடகத்தில்,மைசூர் பகுதியில்
காணப்படுகிறது.
இதன் பழங்கள் கருமை கலந்த நீலம் அல்லது செம்மையோடிய
நீலநிறத்தில் கடினமாக மேலோட்டுடன் இருக்கும்.
இந்த மரத்தின் இலைகள் வாதமரத்தின் இலைகளைப் போல்
ஆறு அங்குல நீளத்தில் இருக்கும்.
முதிர்ந்த இலைகள் உதிர்ந்த உடன் அந்த கணுக்களில்
பூக்கள் வெண்மை நிறமுடையதாக இருக்கும்.
நேபாள நாட்டில் விளையும் உருத்திராட்ச மணிகளே தரத்தில்
உயர்ந்தனவாக கருதப்படுகிறது.
இந்தியாவில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள காசி நகரம்
தான் உருத்திராட்ச மணிகளுக்கு முக்கியமான சந்தையாக இருக்கிறது.
ருத்திராக்ஷம் மொத்தம் 21 முகம் மணி வரை உள்ளன.
எக முகம்,இரு முகம்,மூன்று முகம் என மூவகை முகம்
அபூர்வமானதாகவும்,சக்தி உடையனதாகவும் கருதப்படுகிறது.
ருத்திராக்ஷத்தின் காய்களின் அளவை வைத்து மூன்று
தரமாக பிரிக்கின்றனர்.
நெல்லிக்காய் அளவு – பூரண பலனையும்,
இலந்தைப் பழ அளவு – மத்திம் பலனையும்,
கடலை அளவுள்ளது
- அதம பலனையும் தருகிறது.