Wednesday, 28 July 2021

காசியில் கண் கண்ட தெய்வம்

 

காசியில் கண் கண்ட தெய்வம்

கண் கண்ட தெய்வமான சூரியனுக்கு காசியில் 12 கோயில்கள் உள்ளன.

1. பகீரதன், தன் முன்னோர்கள் நற்கதி அடைய தவம் செய்து, பூலோகத்திற்கு கங்கா நதியை வர வழைத்தான், இதை அறிந்த சூரியன் அதில் நீராடினார். அவர் நீராடிய லலிதாகாட் படித்துறை அருகில் கங்காதித்யர் என்னும் சூரியக்கோயில் கட்டப்பட்டது.

2. காஷ்யப மகரிஷியின் மனைவி வினதைக்கு முட்டைகள் மூலம் குழத்தைகள் பிறந்தன. முதல் முட்டையில் ஆந்தையும், இரண்டாவது முட்டையில் அருணனும், முன்றாவது முட்டையில் கருடனும் தோன்றினர். இதில் ஆந்தையும், அருணனும் சூரியனை வழிபட்டனர். இதன் மூலம் ஆந்தைக்கு லட்சுமிதேவியின் வாகனமாகும் பாக்கியம் கிடைத்தது. சூரியனின் தேரோட்டும் சாரதியாகும் பேறு பெற்றார். அருணன் வழிபட்ட சூரியன் அருணாதித்யர் என்னும் பெயரில் அருள்புரிகிறார்.

3. கிருஷ்ணரின் மகன் சாம்பனுக்கு தொழுநோய் அற்பட்டது. இதிலிருந்து விடுபட சூரியனை சரணடையும்படி கிருஷ்ணர் வழிகாட்டினார். காசிக்கு வந்த சாம்பன் அங்குள்ள சூரியக்கோயிலில் வழிபட்டு பலம் பெற்றான். சாம்பன் வழிபட்ட சூரியன் 'சாம்பாதித்யர்" எனப்படுகிறார்.

4. கருடன் தன் தாய் வினதையுடன் சூரியனை வழிபட்டு அளப்பரிய பலம் பெற்றார். அதன் விளைவாக விஷ்ணுவின் வாகனமாரும் பேறு கிடைத்தது. தாயும் மகனும் வழிபட்ட சூரிய பகவான் "சுஷோல்கா ஆதித்யர்' என அழைக்கப்படுகிறார். காசியிலுள்ள திரிலோசனர், காமேஸ்வரர் கோயில் பிரகாரத்தில் இந்த சூரியனுக்கு சன்னதி உள்ளது.

5. தொழுநோயால் அவதிப்பட்ட விமலன் என்னும் மன்னர், முனிவர்களின் ஆலோசனைப்படி சூரியனை வழிபட்டார். அவருக்கு காட்சியளித்த சூரியன், இனி உன் வம்சத்தில் யாருக்குமே தொழுநோய் வராது என அருள்புரித்தார். காசியில் கதோலியா என்ற இடத்திற்கு அருகிலுள்ள ஜங்கம்பாடியில் இவருக்கு கோயில் உள்ளது. இவருக்கு ‘விமலாதித்யர்' என்று பெயர்.

6. சூரியனின் மகனான எமதர்மன் தன் சக்தியைப் பெருக்க விரும்பி சூரியக் கோயில் ஒன்றைக் கட்டினார். "எமாதித்யர்" எனப்படும் இவருக்கு காசி சங்கடா காட்டில் கோயில் உள்ளது.

7. சூரியன் அளித்த அட்சய பாத்திரத்தின் மூலம் திரவுபதி அன்னதானம் செய்தாள். அவள்

வழிபட்ட சூரியக்கோவில் காசியிலுள்ள அட்சய பீடத்தில் உள்ளது. இங்குள்ள சூரியனுக்கு 'திரவுபதி ஆதித்யர்’ என்று பெயர்.

8. விருத்தன் என்னும் அந்தணர் சூரியனை வழிபட்டதன் பயனாக முதுமை நீங்கி இளமையைப் பெற்றார். விருத்தன் வழிபாடு செய்த 'விருத்தாதித்யர் கோயில் காசியிலுள்ள மீர்காட்டில் உள்ளது.

9. மன சஞ்சலம், துன்பத்தை தீர்த்து வைப்பவர் என்பதால் குரியனை ‘லோலார்க்கர்' என்று அழைப்பர். இவருக்கு காசியிலுள்ள அதிசங்கமத்தில் கோயில் உள்ளது. இங்குள்ள லோலார்க்க குண்டம் என்னும் குளம் புகழ் மிக்கது.

10. காசிக்கு வடக்கிலுள்ள ‘அலேம்புரா’ என்னும் இடத்தில் உத்திர அர்க்க குண்டம் என்னும் சூரிய தீர்த்தம் உள்ளது. வக்ரியா குண்டம் என்றும் இதைச் சொல்வர், இங்கு ஒரு ஆடும். ஒரு பெண்ணும் தவமிருந்து சூரியனின் அருளைப் பெற்றனர். இங்குள்ள சூரியன் 'உத்திர அர்க்கர்’ என்பது பெயர்.

11. கங்கையிலுள்ள வருணா சங்கமத்தில் சூரியன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். மகாவிஷ்ணுவான கேசவனின் அருளால் அமைத்த சிவலிங்கம் இங்குள்ளது. இங்குள்ள சூரியனுக்கு 'கேசவாதித்யர்' என்று பெயர்.

12. கங்கைக்கரையிலுள்ள பஞ்ச கங்காராட் அருகில் மயூகாதித்யர் என்னும் குரியக்கோயில் உள்ளது. புராண காலத்தில் சூரியன் இங்கு கபஸ்தீஸ்வரர், மங்கள கவுரி என்னும் பெயர்களில் சிவபார்வதியை பிரதிஷ்டை செய்து லட்சம் ஆண்டுகள் தவமிருந்து வழிபட்டார். மனம் இரங்கிய சிவன் காட்சியளித்து சூரியனுக்கு "மயூகன்" (என்றும் அழியாதவன்) என்று பெயர் சூட்டினார். காசிக்கு சென்றால், காசி விஸ்வநாதரோடு சூரியக் கோயில்களையும் வழிபட்டால் சகல வரங்களும் கிடைக்கும்.

No comments:

Post a Comment