அட்டெண்டென்ஸ் ரிஜிஸ்டர் - வருகைப் பதிவேடு
அட்மிசன் நம்பர் - சேர்க்கை எண்
அடிசனல் பேப்பர் - துணைத் தாள்
அப்ளிகேசன் - விண்ணப்பம்
ஆப்சனல் சப்ஜக்ட் - விருப்பப்பாடம்
ஆவரேஜ்,
சராசரி - நிரவல்
அனுவல் எக்சாமினேசன் - ஆண்டுத் தேர்வு
இன்வென்சன் - புதிதாக்கம்
இன்ஸ்ட்ரக்டர் - குறித்துரையாளர்
இன்ஸ்பெக்சன் - ஆராய்வு
ஐடன் டிபிகேசன் - ஆளறிவொப்பம்
எம்.எஸ். (M.S.) - அ மு. (அறுவை முதுவர்)
எம்.எஸ்.ஸி
( M.Sc.) - அறி மு (அறிவியல் முதுவர்)
எம்.ஏ (M.A.) - க.மு
(கலை முதுவர்)
எம்.ஒ.எல்
(M.O.L) - கீ க.மு. (கீழைக்கலை முதுவர்)
எம்.டி. (M.D.) -
ம.ம. (மருந்துகள் மருத்துவர்)
எம்.எஸ்.எல்.சி - உ.ப.வி.சா.
(உயர்நிலைப்பள்ளி விடுகைச்
சான்றிதழ்)
ஏ.எம். (A.M.) - மு.ப. (முற்பகல்)
ஏ.சி.சி. (A.C.C) - இ.மா.ப. (இளவோர் மாணவர்
படை)
கலர் பென்சில் - வண்ணக் கரிக்கோல்
கார்டியன் - புரப்போர்
காலேஜ் - கல்லூரி
கிராப் நோட் - வரை கணக்குச்சுவடி
கேடட் - படைமாணி
கொஸ்டின் பேப்பர் - வினாத்தாள்
சயின்ஸ் விஞ்ஞானம் - அறிவியல்
சர்ட்டி பிகேட் - சான்றிதழ்
சர்குலர் - சுற்றறிக்கை
சாக்பீஸ் - சுதை, மாக்கட்டி
சாய்ஸ் - உகப்பு
சார் - ஐயா
செலபஸ் - பாடத்திட்டம்
சிலேட் - கற்பலகை
சிலேட்டுக்குச்சி - பலப்பம்
சூபர்வைசன் - மேற்பார்வை
செனட் - பேரவை
சென்டர் - மையம்
செண்டிரல் - நடுவண்
சென்டன்ஸ் - சொற்றொடர்
சோசியல் சமூகம் - குமுகம்
டாக்டர் Ph.D. - பண்டாரகர், முனைவர்
டிகிரி - படிநிலை
டிக்டேசன் - சொல்வதெழுதல்
டிபார்ட்மெண்ட் - துறை, திணைக்களம்
டிஸ்கவரி - புதிதறிதல், கண்டுபிடிப்பு
டிஸ்கிரிப்சன், வர்ணணை - வண்ணணை
டியூடர் - பயிற்றாசிரியர்
டெபனிசன் - விளக்கம், வரையறை
டெமான்ஸ்ட்டிரேட்டர் - விளக்கவுரையாளர்
டெலஸ்கோப் - தொலைநோக்கி
டெஸ்க் - சாய்வுப் பலகை
டேபிள் - மிசைப்பலகை
டைட்டில் - பட்டம், தலைப்பு
தசமம் - பதின்மம்
தியரி - கருதுகோள்
நோட் புக் - குறிப்புச்சுவடி, குறிப்பேடு
பார்முலா - வாய்பாடு
பாலிடெக்னிக் காலேஜ் - பல் தொழில் நுணுக்கக் கல்லூரி
பி.இ. (B.E.) - பொ.இ. (பொறியியல் இளவல்)
பி.எம் (P.M) - பி.ப. (பிற்பகல்)
பி.எல் (B.L) - ச.இ. (சட்ட இளவல்)
பி.ஏ. (B.A) - க.இ.
(கலை இளவல்)
பி.எஸ்.ஸி (B.Sc.) - அறி.இ. (அறிவியல் இளவல்)
பி.ஓ.எல். (B.O.L) - கீ.க.இ. (கீழைக்கழக இளவல்)
P.T.O. - திருப்புக
பி.யூ.சி. (P.U.C.) - முன்னிலை வகுப்பு (மு.வ.)
பிரசண்ட் சார் - உள்ளேனையா
பிராக்டிகல் எக்சாம் - செய்முறைத் தேர்வு
ஃபீஸ் - கட்டணம்
புக், புத்தகம் - பொத்தகம்
பெஞ்ச் - விசிப்பலகை
பெர்சன்டேஜ் - விழுக்காடு
பென், பேனா - தூவல்
போர்டிங் ஸ்கூல் - உறைபள்ளி
ப்ராஸ்பெக்டஸ் - விளக்கச் சுவடி
பாஸ் - தேறல்
பெயில் - தோற்றல், தவறல்
பெளதிகம் (Physics) - இயங்கியல்
மார்க்லிஸ்ட் - மதிப்பெண் பட்டியல்
மேகசின் - ஆண்டு மலர்
மைக்ராஸ் கோப் - நுண்ணோக்கி
இரசாயணம் (Chemistry) - வேதியல்
ரிவிசன் - மீட்பார்வை
லெச்சரர் - விரிவுரையாளர்
விகிதம் - நேரியம்
வீதம் - மேனி
சாமின்றிபாக்ஸ் - வரைகருவிப்பெட்டி
ஜ்யாக்ரபி, பூகோளம் - நில நூல்
ஸ்காலர்சிப் - உதவித்தொகை
ஸ்கேல் - அளவுகோல்
ஸ்டாஃவ் - ஊழியர்
ஸ்டைபண்டு - உதவிப்பணம்
ஸ்டூல் - மொட்டை நாற்காலி
ஹால் டிக்கட் - கூடச்சீட்டு
ஹாஸ்ட்டல் வார்டன் - விடுதிக் கண்காணிப்பாளர் (தகையர்)
ஹிஸ்டரி, சரித்திரம் - வரலாறு
No comments:
Post a Comment