அகிம்சை - இன்னா செய்யாமை
அபிசேகம் - முழுக்காட்டு
ஆத்திகம் - உண்மைக்கோல்
ஆத்மா - ஆதன், உறவி
ஆத்மீகம் - ஆதனிகம்
இராமன் - அழகன்
ஈசுவரன் - கட்டளையன், செல்வன்
கதாகாலட்சேபம் - இசைக்கதை (பொழுது போக்குக் கதை)
கணபதி - குழுத்தலைவன்
கர்ப்பக் கிருகம் - கருவறை
கனகசபை - பொன்னம்பலம்
கிருபானந்தன் - அருட்பேரின்பம்
கும்பாபிடேகம் - குட நீராட்டு
கோபாலன் - ஆவலன்
கோவிந்தன் - ஆவேந்தன்
சகுனம் - புட்குறி
சத்தியமூர்த்தி - உண்மை வடிவன்
சந்திரன் - நிலவன்
சமீதி - பொறுப்பகம்
சரணம் - அடியம்
சரவணபவா - நாணற் காட்டுத் தோன்றல்
சாபம் - சாவம்
சாமி - உடையார்
சிவஞானம் - சிவ மெய்யறிவு
சிவாயநம - சிவ வணக்கம்
சுந்தரன் - அழகன், சொக்கன்
சுப்ரபாதம் - நல் விடிவெள்ளி
சுப்ரமணியன் - முருகன், கடம்பன், வேலன், குமரன், ஆறுமுகம்,
கந்தன்.
சொக்கநாதன் - உலகத்தலைவன்
சொர்க்கம் - துறக்கம்
சோமஸ்கந்தர் - உமைச்சிவ முருகர்
ஞானம் - மெய்யறிவு
தாமோதரன் - தாமவயிற்றன்
திருச்சிற்றம்பலம் - திருவறிவம்பலம்
நரகம் - நிரயம்
நாத்திகம் - இன்மைக்கோள்
பக்கிரிசாமி - துறவுடையான்
பக்தி - மெய்யன்பு
பரமண்டலம் - உயர் மண்டிலம்
பஜனை - திருப்பா
பாலகிருட்டிணன் - கண்ணன்
பிரகாரம் - திருச்சுற்று
பிராசார சபா - பரப்பவை
பிரமச்சாரி - (பெருமச்சார்பி) மாணி
பிராட்டஸ்ட்டெண்ட் - சீர்திருத்தாளர்
பிராமணன் - பார்ப்பனன்
பிராணன் - உயிர்
பூஜை - பூசனை
மனுஸன் - மனிதன், மாந்தன்
மூர்த்தி - உருவம், வடிவம்
மோட்சம் - வீடு
மெளனம் - வாளாமை
யோகம் - ஓகம், சேர்கை
வரம் - வரவம்
வரன் - நம்பி
விக்ரகம் - படிவம்
விசுவநாதன் - அண்டநம்பி
வைத்தியநாதன் - வினைதீர்த்தான்
ஸ்தலம் - திருவூர்
ஜாதகம் - பிறப்பியம்
சோசியர் - கணியர்
சரசுவதி - கலைமகள்
இலக்குமி - திருமகள்
பார்வதி - உமை, மலைமகள்
No comments:
Post a Comment