Sunday, 19 September 2021

27 நட்சத்திரத்திற்கும் உரிய சித்தர்கள்

  

 27 நட்சத்திரத்திற்கும் உரிய சித்தர்கள்

 27 நட்சத்திரத்திற்கும் உரிய சித்தர்களை பற்றி பார்ப்போம். எல்லா சித்தர்களின் ஜீவ சமாதியும் சிவாலயமாகவே இருக்கும். குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும்வறுமையையும் போக்கிக்கொள்ளுங்கள்.

1. அசுவினி: அசுவினி நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் பெயர் காளங்கிநாதர். இவருடைய சமாதி மற்றும் சக்தி அலைகள்  கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது.

2. பரணி: சித்தர் போகர் ஆவார். இவருடைய சமாதி பழனி முருகன் சன்னதியில் உள்ளது.

3. கிருத்திகை: ரோமரிஷி சித்தர் ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரடியாக கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என்பதால், இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி நினைத்து வணங்க வேண்டும்.

4. ரோகிணி: சித்தர் மச்சமுனி ஆவார். இவருடைய ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.

5. மிருகசீரிஷம்: சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர்  திருவரங்கம் ஆகும்.

6. திருவாதிரை: சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலையில் உள்ளது.

7. புனர்பூசம்: சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைத்தீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

8. பூசம்: கமல முனி சித்தர் ஆவார். இவருடைய ஜீவ சமாதி திருவாரூர் என்ற ஊரில் உள்ளது.

9. ஆயில்யம்: இந்த நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் அகத்தியர். இவருடைய ஒளி வட்டம் குற்றால பொதிகை மலையில் உள்ளது. சமாதி  திருவனந்தபுரத்தில் உள்ளது.

10. மகம்: இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது.

11. பூரம்: இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவியின் அம்சமாக உள்ளார். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவரை வழிபட வேண்டுமானால் அழகர் மலைக்கு செல்வது சிறப்பு.

12. உத்திரம்: இந்த நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி திருச்சி மாவட்டம் உறையூரில் உள்ளது.

13. அஸ்தம்: சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய  கோயில் ஆகும்.

14. சித்திரை நட்சத்திரம்: சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.

15. சுவாதி: சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.

16. விசாகம் நட்சத்திரம்: சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும், குதம்பை சித்தரின் ஜீவ சமாதி  மாயவரத்திலும் உள்ளது.

17. அனுஷம்: சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுவார். இவரின் ஜீவ சமாதி எட்டுக்குடியில் உள்ளது.

18. கேட்டை: சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே  போதும். அவ்விடம் வருவார்.

19. மூலம் நட்சத்திரம்: சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது.

20. பூராடம்: சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு

     சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ  ஒளி உள்ளது.

21. உத்திராடம்: சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதியில் உள்ளது.

22. திருவோணம்: இந்த நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவருடைய சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள  பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.

23. அவிட்டம்: சித்தர் திருமூலர் ஆவார். இவருடைய ஜீவசமாதி சிதம்பரத்தில் உள்ளது.

24. சதயம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர். இவரின் சமாதி எங்கு என தெரியவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.

25. பூராட்டாதி: இதற்கான சித்தர் சோதி முனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால்  அங்கு அருள் பாலிப்பார்.

26. உத்திரட்டாதி: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்து விட்டதாக வரலாறு கூறுகிறது. இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம்.

27. ரேவதி: சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது. தனி அறையில் ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒரு நிலைப்பாட்டோடு சித்தரை வணங்கி வந்தால் போதும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


நாம் சிவ பக்தரா? அல்லது சிவன் அடியாரா?

 

நாம் சிவ பக்தரா அல்லது சிவன் அடியாரா?

  இவ்விரண்டுமே ஒன்றுபோலத்தான் தெரியும். ஆனால் சிவ பக்தனுக்கும் சிவனடியாருக்கும்சில வேறுபாடுகள் உள்ளன என்பதை உணர்ந்ததுண்டா?

1.சிவனை கண்டதும் பனிபவன் பக்தன்.

  சிவனுக்காக எதையும் செய்யத் துணிந்தவன் அடியார்.

2.சிவனை வணங்குபவர் பக்தன்.

  சிவனை மட்டும் வணங்குபவர் அடியார்.

3.உடல் தூய்மையாக இருந்தால் மட்டுமே கோயிலுக்கு செல்பவர் பக்தன்.

   உடலை ஒரு பொருட்டாக கருதாமல், மனத்தூய்மை வேண்டி கோயிலுக்கு செல்பவர்

   அடியார்.

4.அர்ச்சனை செய்வதற்காகக் கோயில் செல்பவர் பக்தன்.

   ஈசனைப் போற்றிப் பாடி ஆனந்தமடைய கோயில் செல்பவர் அடியார்.

5.அறமல்ல சிவம் என்று உணராதவர் பக்தன்.

   அன்பே சிவமென உணர்ந்தவர் அடியார்.

6.மறைக்குள்ளும் முறைக்குள்ளும் இருப்பவர் ஈசன் என்று நினைப்பவர் பக்தன்.

  ஈசனை அடைய மனமும் மொழியும் தடையில்லை, ஆக மறையும் முறையும்

  எமக்கில்லை என்று நினைப்பவர் அடியார்.

7.கூட்டத்தோடு கூட்டமாக முண்டியடித்து இறைவனைக் காண்பவர் பக்தன்.

   கூட்டம் போனபின் ஈசன் அழகைத் தனித்து நின்று ரசிப்பவர் அடியார்.

8. ஈசனை அடைய சுத்தமாக இருக்கவேண்டும் என நினைப்பவர் பக்தன்.

   சுத்தத்தைப் பெரிதாக எண்ணாமல் சித்தத்தை சிவன்பால் வைப்பவர் அடியார்.

9. வாழ்வில் ஒரு பகுதியை வழிபாட்டுக்கு செலவு செய்பவர் பக்தன்.

    வாழ்வையே வழிபாடாகக் கொண்டவர் அடியார்.

சிவபக்தனாக இருப்பதைவிட சிவனடியாராக இருப்பது மிக மிக சுலபம்.

சிவபக்தனுக்கு மறுபிறவி நிச்சயம். சிவனடியார்க்கு முக்தி நிச்சயம்

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!!

மரணத்தை யாராலும் வெல்ல முடியாது

 

மரணத்தை யாராலும் வெல்ல முடியாது

மரணத்தை யாராலும் வெல்ல முடியாது என்பதுக்கு ஒரு சிறு உதாரணம்

மைக்கேல் ஜாக்சன் 150 ஆண்டுகள் வாழ விரும்பினார்.......

                    தன் வீட்டில் 12 மருத்துவர்களை நியமித்தார், அவர் தினமும் முடி முதல் கால் நகங்கள் வரை பரிசோதிப்பார். உண்பதற்கு முன்பு அவரது உணவு எப்போதும் ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டது.

 அவரது தினசரி உடற்பயிற்சி மற்றும் உடற்பயிற்சியைக் கவனிக்க மேலும் 15 பேர் நியமிக்கப்பட்டனர். அவரது படுக்கையில் ஆக்ஸிஜன் அளவைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் இருந்தது.

 உறுப்பு தானம் செய்ய நன்கொடையாளர்கள் தயாராக இருந்தனர். இதனால் அவருக்கு தேவைப்படும்போது உடனடியாக தங்கள் உறுப்பை தானம் செய்யலாம். இந்த நன்கொடையாளர்களின் பராமரிப்பையும் அவர் கவனித்துக்கொண்டார்.

அவர் 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற கனவுடன் தொடர்ந்தார்.

அவன் தோற்றான்;

           25 ஜூன் 2009 அன்று, தனது 50 வயதில், அவரது இதயம் செயல்படுவதை நிறுத்தியது. அந்த 12 மருத்துவர்களின் நிலையான முயற்சி பலனளிக்கவில்லை.

                               இருந்தாலும் கூட, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிபோர்னியாவைச் சேர்ந்த மருத்துவர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

 கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவர்களின் ஆலோசனையின்றி ஒருபோதும் ஒரு படி கூட முன்னேறாத நபர், 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற அவரது கனவை நிறைவேற்ற முடியவில்லை.

 ஜாக்சனின் இறுதி பயணத்தை 2.5 மில்லியன் மக்கள் நேரடியாகப் பார்த்தார்கள், இது இன்றுவரை மிக நீண்ட நேர ஒளிபரப்பு.

அவர் இறந்த நாளில், அதாவது. 25 ஜூன் '09 பிற்பகல் 3.15 மணிக்கு, விக்கிபீடியா, ட்விட்டர், உடனடி தூதர் வேலை செய்வதை நிறுத்தினார். கூகூளில் மைக்கேல் ஜாக்சனை மில்லியன் கணக்கான மக்கள் ஒன்றாகத் தேடினர்.

ஜாக்சன் மரணத்தை சவால் விட்டு ஜெயிக்க முயன்றார். ஆனால் மரணமோ அவருக்கு சவால் விட்டது.

இப்போது சிந்திக்கலாம்......

அலங்கரிப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள்  பில்டர்கள் அல்லது பொறியாளர்களுக்காக நாம் சம்பாதிக்கிறோமா?

             விலையுயர்ந்த வீடு, கார், ஆடம்பரமான திருமணத்தைக் காண்பிப்பதன் மூலம் நாம் யாரைக் கவர விரும்புகிறோம்?

 இரண்டு மாதங்களுக்கு முன்பு நீங்கள் கலந்து கொண்ட திருமண வரவேற்பில் உண்ட உணவுப் பொருட்கள் அல்லது வேறு ஏதாவது ஒரு நிகழ்வுகள் உங்களுக்கு நினைவு படுத்த முடிகிறதா?

நாம் ஏன் வாழ்க்கையில் ஒரு மிருகத்தைப் போல வேலை செய்கிறோம்?

எத்தனை தலைமுறைகளை நாம் காப்பாற்ற விரும்புகிறோம்?

நம்மில் பெரும்பாலோருக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் உள்ளனர். நமக்கு எவ்வளவு தேவை, அவர்களுக்கு எவ்வளவு வேண்டும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

நம் பிள்ளைகள் அதிகம் சம்பாதிக்க முடியாது என்று நாம் கருதுகிறோமா? எனில் அவர்களுக்காக கூடுதல் கூடுதல் சேமிக்க வேண்டியது அவசியம்?

வாரத்தில் உங்கள் குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ சிறிது நேரம் செலவிடுகிறீர்களா?

நீங்கள் சம்பாதித்ததில் 5% நீங்களே செலவிடுகிறீர்களா?

நாம் சம்பாதித்தவற்றோடு வாழ்க்கையில் ஏன் மகிழ்ச்சியைக் காணவில்லை?

நீங்கள் ஆழமாக சிந்தித்தால், உங்கள் இதயம் வேலை செய்யத் தவறிவிடும். அவ்வாறு இருந்தால் மனசஞ்சலம், அதிக கொழுப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் பாதிக்கப்படுவீர்கள்.

முடிவு: 

       உங்களுக்காக நீங்கள் சிறிது நேரம் செலவிடுங்கள். நம்மிடம் எந்தவொரு சொத்தும் இல்லை சில ஆவணங்களில் மட்டுமே நம் பெயர் தற்காலிகமாக எழுதப்பட்டுள்ளது.

            இது என்னுடைய சொத்து என்று நாம் கூறும்போது, ​​கடவுள் நம் மீது ஒரு வக்கிர புன்னகையை வீசி விட்டு கடந்து செல்கிறார்.

 ஒரு நபர் தனது கார் அல்லது உடையைப் பார்க்கும்போது ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டாம். சிறந்த கணிதவியலாளர்களும் விஞ்ஞானிகளும் பயணத்திற்கு சைக்கிள் அல்லது ஸ்கூட்டரைப் பயன்படுத்தினர்.

 பணக்காரனாக இருப்பது பாவம் அல்ல, ஆனால் பணத்தால் மட்டுமே பணக்காரனாக இருப்பது பாவம்.

 வாழ்க்கையை கட்டுப்படுத்துங்கள், இல்லையெனில் வாழ்க்கை உங்களை கட்டுப்படுத்தும்.

 வாழ்க்கையின் முடிவில் உண்மையில் முக்கியமான விஷயங்கள் மனநிறைவு, திருப்தி மற்றும் அமைதி. இது தான் மனிதர்களுக்கு தேவை என்பதை மறவாமல் மனதில் கொள்வோம்

நீங்கள் என்ன செலவு செய்தாலும், இவற்றை பணம் கொடுத்து வாங்க முடியாது.....

இறைவனுக்கு ஐந்து விதமான சேவைகள்

 

ஐந்து விதமான சேவைகள்

 இறைவனுக்கு ஐந்து விதமான சேவைகள் மூலம் நம் பாவங்களை நாம் போக்கிக்கொள்ள முடியும். அவையாவன

1. யாதனம்                 - கோயில் கட்டுதல், நந்தவனம் அமைத்தல், கோயில் திருப்பணிகள்

  செய்தல்.

2. சிரவணம்               - இறைவனின் பெருமைகளை ஆன்மீகம் அறிந்தவர்களின் மூலமாக

                                   கேட்டல்.

3. கீர்த்தனம்              - இறைவனை இசை கருவிகள் கொண்டு பாடி ஆடி மகிழ்வித்தல்.

4. பூஜார்தனம்           - அபிஷேகம் செய்தல், அலங்காரம் செய்தல், அர்ச்சனை செய்தல்,

                                   நைவேத்தியம் படைத்து பூஜை செய்தல்.

5. ஸ்துதி                    - இறைவனை புகழ்ந்து தோத்திர இசைப் பாடல்களை பாடுதல்.

 இந்த ஐந்த விதமான சேவைகளை நாம் செய்து வர நம் கர்ம வினைகளால் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் மாறி இன்பங்கள் நல்கும்.

கர்ம வினைகள்

 

கர்ம வினைகள்

 மனிதன் தன் வாழ்நாளில் மூன்று வகையான கர்ம வினைகளை பெற்று அனுபவிக்கிறான்.

1)    சஞ்சித கர்மம்

2)    பிராப்த கர்மம்

3)    ஆகாமிய கர்மம்

சஞ்சித கர்மம்:

 இதில் சஞ்சித கர்மம் என்பது நம் கரு உருவாகும் போதே உடன் உருவாவது, அதாவது முன்ஜென்மங்களில் நாம் செய்த பாவ புண்ணியத்தின் வித்தாக இந்த பிறவியில் நம்மை பற்றிக்கொள்ளும் கர்ம வினையாகும்.

பிராப்த கர்மம்:

 பிராப்த கர்மா என்பது நாம் இந்த பிறவியில் உடலெடுத்து வாழும் காலத்தில் நம் ஜீவனத்துக்காக நாம் செய்யும் தொழிலின் வாயிலாகா நாம் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் உண்டாகும் கர்ம வினை, இந்த கர்மாவால் வரும் பலனையும் நாம் இந்த பிறவிலேயே அனுபவிக்கவேண்டும்.

ஆகாமிய கர்மம்:

மூன்றாவதாக ஆகாமிய கர்மா என்பது இந்த பிறவியில் நாம் வாழும் காலத்தில் நம் ஆசைகளால் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் வருவது,

இவ்விதமாக மூன்று வகையான கர்மாக்கள் நம்மை சூழ்ந்துள்ளன.

 இந்த கர்மவினைகளில் இருந்து யாரும் தப்பிவிட இயலாது, அனைவரும் கர்மவினையில் சிக்கி உழன்றாக வேண்டியதுதான், நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், விரயங்கள், கடன்கள், பிரிவினைகள், முடக்கங்கள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் நான் மேலே குறிப்பிட்ட கர்ம வினைகளின் சாராம்சம் ஆகும்.

 இந்த கர்ம வினைகளை களைய நம்மில் பலர் பல ஆலயங்களுக்கு சென்றும், பலவிதமான பரிகாரங்களை மேற்கொண்டும் கைப்பணம் செலவானதுதான் மிச்சம், நம் கர்ம வினைப் பலன்கள் மட்டும் மாறிய பாடில்லை, நம் வேதனை தீர்ந்த_பாடில்லை. அப்படியென்றால் நம் கர்ம வினைகளை தீர்க்க வழியே இல்லையா ?

 ஏன் இல்லை. கர்ம வினைகளை நீக்க பரிகாரங்கள் உள்ளது, ஆனால் அதனை நமக்கு சரியாக விளக்கி சொல்ல ஆட்கள்தான் இல்லை. இங்கே ... நமது புராணங்களும், சாஸ்திரங்களும் பறைசாற்றுகின்ற கர்ம வினைகளை நீக்கும் உபாயங்களை விவரிக்கிறேன்.

பிரம்மா- எல்லா படைப்பு இயக்கங்களையும் செய்பவர். அவரின் படைப்புக்கு தேவையான ஞானத்தினை தருகிற சரஸ்வதி அவரின் மனைவி.

விஷ்ணு - காக்கும் கடவுள், எல்லா உயிர்களையும் இரட்சித்து காப்பவர். இவர் உலகினை காக்க செல்வம் வேண்டுமல்லவா? அதை அவருக்கு நல்க செல்வத்திற்கு அதிபதியான மஹா லக்ஷ்மி அவரின் மனைவி.

சிவம் - அழிக்கும் கடவுள். மனிதனின் அஞ்ஞான இருளை, கர்மவினைகளை, தீமைகளை அளித்து நன்மை தருபவர். இவருக்கு தீமைகளை அழிக்கின்ற சக்தியினை தருவதற்கு சக்தி தேவியே இவருக்கு துணைவியாக.

அப்படியென்றால் நம் கர்ம வினைகள் நீங்க நாம் யாரை பற்ற வேண்டும்?

நம் கர்ம வினைகளை யாரால் தீர்க்க முடியும்?

தேவாதி_தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும் தேடிச்சென்று சரண் புகுந்தது யாரிடம்?

 அறியா பருவ குழந்தைகூட சொல்லிவிடும் அத்தகைய ஆற்றல் கொண்டவர் சிவபெருமான் ஒருவரே என்று. நாமும் நம் கர்ம வினைகள் நீங்க அவரையே பற்ற வேண்டும். சரி அவரை பற்றிவிட்டோம். நம் கர்ம வினைகள் நீங்க நாம் என்ன செய்ய வேண்டும்.

 மனித உடல் இறைவனால் பஞ்சபூதத்தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. நிலம், நீர், நெருப்பு, கற்று, ஆகாயம் என்பவைபஞ்ச பூதங்களாகும். சிவனே பஞ்சபூத பெருமையை சிறப்பிக்கும் விதமாக பஞ்சபூத தலங்களில் நாயகனாக நின்று அருள்பாலிக்கிறார்.

அவையாவன

1. காஞ்சிபுரம் - நிலம் - ஏகம்பநாதர்

2. திருவனைகாவல் - நீர் - ஜலகண்டீஸ்வரர்

3. திருவண்ணாமலை - நெருப்பு - அண்ணாமலைநாதர்

4. காளஹஸ்தி - வாயு - காளத்திநாதர்

5. சிதம்பரம் - ஆகாயம் - நடராஜர்

 ஆகவே பஞ்சபூத ஆற்றலில் உண்டாக்கப்பட்டு இயங்கும் மனிதன், தாம் வாழும் காலத்தில் பஞ்ச இந்திரியங்களால் ( ஐந்து புலன்களால் - மெய், வாய், கண், காது, மூக்கு) ஆகியவற்றின் மூலியமாக தூண்டப்பட்டு தன் புலன்களால் இச்சைக்கு அடிமையாகி செய்யும் செயல்களால் பிறருக்கு தீங்கு நேரும் பொது பாவங்கள் - கர்மவினைகள் உண்டாகிறது.

 எவ்வகையில் பாவம் செய்தோமோ அவ்வகையில் தானே அதனை தீர்க்க முடியும். பஞ்ச பூதங்களால் - பஞ்ச இந்திரியங்களால் தோன்றிய பாவத்தை - பஞ்ச லிங்கங்கள் அல்லவா தீர்க்க முடியும்.

ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள்

 

ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள்

 இந்த ஸ்லோகத்தை அவரவர் நட்சத்திரத்திற்கு கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும்.

ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்

1. அஸ்வினி

ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய 

தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய

நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய

பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய

2. பரணி

கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய 

சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய

மூல காரணீய கால காலதே நம: சிவாய

பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய

3. கிருத்திகை

இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நம: சிவாய 

துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய

ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய 

அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய

4. ரோஹிணி

ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய 

பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய

பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய 

சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய

5. ம்ருகசீர்ஷம்

வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய 

ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய

நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய 

காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய

6. திருவாதிரை

ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய 

ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய

ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய 

ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய

7. புனர்பூசம்

காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய 

ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய

ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய 

ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய

8. பூசம்

ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய 

சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய

மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய 

மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய

9. ஆயில்யம்

யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய 

ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய

பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய 

அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய

10. மகம்

தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய 

அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய

தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய 

உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய

11. பூரம்

ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய 

ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய

ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய 

ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய

12. உத்திரம்

தீனமான வாளி காம தேனவே நம: சிவாய 

ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய

ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய 

தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய

13. ஹஸ்தம்

ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய 

ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய

பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய 

ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய

14. சித்திரை

ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய 

மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய

ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய 

நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய

15. ஸ்வாதி

ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய 

பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய

துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய 

சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய

16. விசாகம்

பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய 

தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய

மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய 

ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய

17. அனுஷம்

மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய 

கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய

ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய 

அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய

18. கேட்டை

ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய 

அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய

தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய 

கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய

19. மூலம்

திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய 

தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய

ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய 

ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய

20. பூராடம்

அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய 

ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய

பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய 

பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய

21. உத்தராடம்

கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய 

சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய

நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய 

குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய

22. திருவோணம்

விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய 

சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய

இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய 

கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய

23. அவிட்டம்

அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய 

ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய

ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய

விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய

24. சதயம்

ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய 

பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய

பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய

தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய

25. பூரட்டாதி

புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய 

சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய

பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய 

யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய

26. உத்தரட்டாதி

அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய 

சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய

ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய 

ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய

27. ரேவதி

சூலினே நமோ நம: 

கபாலினே நம: சிவாய 

பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய

லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய 

சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய

   -     ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நட்சத்திர மாலா ஸ்தோத்திரம்